இச்சம்பவம் குறித்து மெலும் தெரிவருகையில்,
வன்னிப்பிராந்திய பிரதிப் பொலிஸ்மா அதிபர் அனுரா அபேவிக்கிரமவின் மேற்பார்வையில்,
ஓமந்தை எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகில் யாழ்ப்பாணத்திலிருந்து திருகோணமலை நோக்கிச் சென்ற சொகுசு காரினை வழிமறித்து மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின்போது,
பொதி செய்யப்பட்டு மறைத்து எடுத்துச் செல்லப்பட்ட 2கிலோ 50கிராம் கேரள கஞ்சா மீட்கப்பட்டுள்ளது.
குறித்த காரில் பயணித்த சோமசுந்தரம் பிரதீப் வயது 31, சோதசுந்தரம் பிரதீபன் வயது 29, திருவழகன் சதீஸ்குமார் வயது 18, ரவீந்திரன் சதீஸ் 34 வயது தேனபந்கே அமரகீர்தி கிஷாந்த வயது 44 ஆகிய 5 பேரே சந்தேகத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இன்றைய தினம் அவர்களிடம் மேலதிக விசாரணைகளின் பின்னர் நீதவான் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் ஓமந்தைப் பொலிசார் மேலும் தெரிவித்துள்ளனர்.



0 facebook-blogger:
இந்த செய்தி தொடர்பான உங்கள் கருத்தை பதிவிடவும்