Admin-message ONLINECEYLON.NET செய்தித் தளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது.. Admin-message
Headlines
Admin-message

யாழ். உடுவில் பகுதியில் இடம்பெற்ற பயங்கரம்.!

Published on Wednesday, December 5, 2018 | December 05, 2018

தனிமையில் வாழ்ந்த மூதாட்டியை வீடு புகுந்து தாக்கிய குழுவினர் அங்கிருந்து தலைமறைவாகிய நிலையில் படுகாயமடைந்த மூதாட்டி, இரத்தக் காயங்களுடன் மீட்கப்பட்டார்.

72 வயதுடைய ஆ.பொன்மலர் எனும் மூதாட்டியே இத்தாக்குதலிற்கு உள்ளாகியுள்ளார்.

குறித்த சம்பவம் யாழ்ப்பாணம் உடுவில் பகுதியில் நேற்று அதிகாலை 2 மணியளவில் நடந்துள்ளது.

மோட்டார் சைக்கிளில் சென்ற குழுவினரே மூதாட்டியைத் தாக்கியதாக தெரிவிக்கப்படுகிறது.

படுகாயமடைந்த மூதாட்டியை அதிகாலையில் உணவு வழங்க சென்ற மகள் கண்ணுற்று அவசர இலக்கமான119 இற்கு அழைப்பினை மேற்கொண்டு,

உடனடியாக நோயாளர் காவுவண்டி உதவியுடன் தெல்லிப்பளை ஆதார மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.

பின்னர் மேலதிக சிகிச்சைக்காக யாழ் போதனா வைத்தியசாலைக்கு அவர் மாற்றப்பட்டுள்ளார்.

வீட்டிலே பெரிய வளர்ப்பு நாய் நின்றுள்ளது, அது குரைத்த சத்தம் கேட்கவில்லை, இரண்டு கைகளும் கொடூரமாக அடித்து உடைக்கப்பட்டுள்ளது.

தலைப்பகுதி, மற்றும் முகங்கள் முழுவதும் அடிகாயங்கள், உள்ளதுடன்  களவாடும் நோக்கத்தோடு இச்சம்பவம் இடம்பெறவில்லை என பாதிக்கப்பட்ட மூதாட்டியின் மகளின் கணவர்  தெரிவித்துள்ளார்.
நண்பர்களுக்கு பகிரவும் :





0 facebook-blogger:

இந்த செய்தி தொடர்பான உங்கள் கருத்தை பதிவிடவும்

Dream Center

Special Offer

Special Offer
Domain + Hosting & Web Design விஷேட கழிவுடன்

LIKE US ON FACEBOOK

O/L Pass Papers & Books

Send Your News


✔✔ பிரபல செய்திகள் ✔✔

பார்வையாளர்கள்

 
Support : Website Design | Online Ceylon Media Unit | Online Ceylon Web Designing
Proudly powered by Blogger
Copyright © 2016. Tes News - All Rights Reserved