பொலிஸார் சம்பவ இடத்திற்கு தாமதித்தே வருகை தந்ததுடன் வாள்வெட்டுக்குழு மீது எந்த நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லையென பாதிக்கப்பட்ட வர்த்தகர்களும் பொதுமக்களும் விசனம் தெரிவிக்கின்றனர்.
பொலிஸாரைக் கண்டதும் வாள்வெட்டுக்குழு தப்பிச் சென்று விட்டது என்றும் ஆனாலும் பொலிஸார் அவர்களை துரத்திப் பிடிக்கவில்லை எனவும் பாதிக்கப்பட்டவர்கள் கூறுகின்றனர்.
இன்று புதன்கிழமை மீண்டும் சம்ப இடத்திற்குச் வந்த பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
யாழ்ப்பாணம் உள்ளிட்ட வடமாகாணத்தில் வாள்வெட்டுக்குழுக்களின் செயற்பாடுகள் மற்றும் வன்முறைகளின் பின்னணியில் இலங்கைப் படையினர் செயற்படுவதாக பொது மக்கள் ஏற்கனவே குற்றம் சுமத்தி வருகின்றனர்.
தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர் சிறீதரன் இலங்கை நாடாளுமன்றத்திலும் வாள்வெட்டுக்குழுக்களின் வன்முறைகள் குறித்து கேள்வி எழுப்பியிருந்தார்.



0 facebook-blogger:
இந்த செய்தி தொடர்பான உங்கள் கருத்தை பதிவிடவும்