Admin-message ONLINECEYLON.NET செய்தித் தளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது.. Admin-message
Headlines
Admin-message

முல்லைத்தீவு கூளாமுறிப்பு காட்டுக்குள் யுவதி தற்கொலை முயற்சி !

Published on Tuesday, November 13, 2018 | November 13, 2018

கிளிநொச்சி பூநகரியினை சேர்ந்த இளம் யுவதி ஒருவர் முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் வீதியில் அமைந்துள்ள கூளாமுறிப்பு வெள்ளமலை காட்டிற்குள் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

இச்சம்பவம் பற்றி தெரியவருகையில்,13.11.18 இன்று மாலை வெள்ளமலை காட்டுப்பகுதியில் உடலம் ஒன்று கிடைப்பதாக முள்ளியவளை பொலீசாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து அங்கு சென்ற பொலீசார் யுவதி ஒருவர் கையில் வெட்டுப்பட்டு மயங்கிய நிலையில் கிடந்துள்ளார் அவரை மீட்டு முல்லைத்தீவு மாவட்ட மருத்துவ மனையில் அனுமதித்துள்ளார்கள்.

இடதுகையின் மணிக்கட்டு பகுதியில் சிறு வெட்டு காயத்திற்கு உள்ளான நிலையில் அருகில் கடிதம் ஒன்றும் காணப்பட்டுள்ளது அதில் தான் தற்கொலை செய்துகொள்வதாகவும் இதற்கு யாரும் பொறுப்பில்லை என்றம் எழுதப்பட்டுள்ள துண்டு ஒன்றினையும் பொலீசார் மீட்டுள்ளார்கள்.

அதனை தொடர்ந்து யுவதி தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று விடுதியில் தங்கவைக்கப்பட்டுள்ளார் குறித்த யுவதியிடம் பொலீசார் மேற்கொண்ட விசாரணையின் போது எந்த தகவலும் வெளியிடாத நிலையில் குறித்த யுவதியின் தொலைபேசியில் இருந்து இறுதியாக அழைப்பு கிடைத்த இலக்கத்திற்கு தொடர்புகொண்ட பொலீசார் அவரின் பெற்றோர்களை இனம் கண்டு அவரின் நிலமை குறித்து தெரிவித்துள்ளார்.

மட்டுவில் நாடு மேற்கு பூநகரியினை சேர்ந்த 24 அகவையுடைய குறித்த யுவதி 12.11.18 அன்று வீட்டினை விட்டு வெளியேறியுள்ளதாக தெரியவந்துள்ளது. சம்பவம் குறித்து முள்ளியவளை பொலீசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றார்கள்.
நண்பர்களுக்கு பகிரவும் :





0 facebook-blogger:

இந்த செய்தி தொடர்பான உங்கள் கருத்தை பதிவிடவும்

Dream Center

Special Offer

Special Offer
Domain + Hosting & Web Design விஷேட கழிவுடன்

LIKE US ON FACEBOOK

O/L Pass Papers & Books

Send Your News


✔✔ பிரபல செய்திகள் ✔✔

பார்வையாளர்கள்

 
Support : Website Design | Online Ceylon Media Unit | Online Ceylon Web Designing
Proudly powered by Blogger
Copyright © 2016. Tes News - All Rights Reserved