வவுனியா கந்த சுவாமி கோவில் சூரசம்ஹார' போர்
Published on Wednesday, November 14, 2018 | November 14, 2018
வவுனியா சூரன்போரில் திரண்ட ஆயிரக்கணக்கான மக்கள் வவுனியா கந்தசாமி ஆலயத்தில் இன்று பிற்பகல் இடம்பெற்ற சூரன்போரில் ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டதைக்காணக்கூடியதாக உள்ளது
மக்களின் முக்கிய விரதங்களில் ஒன்றான கந்தசஷ்டி விரத இறுதி நாளான இன்று சூரன்போர் இடம்பெற்று வருகின்றமை வழமை. அதனடிப்படையில் இன்று வவுனியா மத்திய நகரிலுள்ள ஸ்ரீ கந்தசாமி ஆலயத்தின் வருடாந்த சூரன்போர் இன்று பிற்பகல் 4மணியளவில் ஆலய வளவிலிருந்து முதலாம் குறுத்குத்தெரு வீதி வழியாக கண்டி வீதி பழைய பேருந்து நிலையத்திற்கு முன்பாக வந்த சூரன் போரில் ஈடுபட்டு
மக்களைப்பரவசத்திற்குள்ளாக்கியுள்ளதுடன் இதனைக்கண்டு கழிப்பதற்காக வவுனியாவின் பல திசைகளிலிருந்தும் பெருமளவான இளைஞர்கள், யுவதிகள், சிறுவர்கள், பாடசாலை மாணவர்கள், குடும்பப்பெண்கள் எனப்பலரும் சூரன்போரைக்கண்டு கழிப்பதற்காக நகரிற்கு வந்து சேர்ந்தனர். இதனால் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலைக்கட்டுப்படுத்த போக்குவரத்துப் பொலிசார் சேவையில் ஈடுபடுத்திப்பட்டு பாதுகாப்பு வழிமுறைகளை மக்களுக்கு வழங்குவதில் ஈடுபட்டிருந்ததுடன் பிரதான வீதிகள் ஊடான போக்குவரத்து மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது வீதிகளில் பெருமளவான பொலிசார் பாதுகாப்புக்கடமையிலும் ஈடுபட்டிருந்ததை காணக்கூடியதாக இருந்தது
நண்பர்களுக்கு பகிரவும் :



0 facebook-blogger:
இந்த செய்தி தொடர்பான உங்கள் கருத்தை பதிவிடவும்