Admin-message ONLINECEYLON.NET செய்தித் தளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது.. Admin-message
Headlines
Admin-message

மஹிந்தவிற்கு எதிரான தீர்மானம் ஏற்றுக்கொள்ளப்பட்டது

Published on Wednesday, November 14, 2018 | November 14, 2018

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிற்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளமையை தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான இரா.சம்பந்தன் உறுதி செய்துள்ளார்.



பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அவருடைய அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் மக்கள் விடுதலை முன்னணியால் சபாநாயகரிடம் கையளிக்கப்பட்டது.

இவ்வாறு கொண்டுவரப்பட்ட  நம்பிக்கையில்லா தீர்மானம் பெரும்பான்மை வாக்குகளுடன் நிறைவேற்றப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிராக ஜே.வி.பி சமர்ப்பித்த நம்பிக்கையில்லா தீர்மானத்தை நாடாளுமன்றம் ஏற்றுக் கொண்டது என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

இதேவேளை ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான அஜித் பி பெரேரா மற்றும் லக்ஷ்மன் கிரியல்ல ஆகியோரும்  இதனை உறுதி செய்துள்ளனர்.

அத்துடன் சபை முதல்வர் தினேஷ் குணவர்தன இந்த வாக்கெடுப்பு சட்டவிரோதமானது என்றும் இதனால் அதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் தெரிவித்துள்ளார்.
நண்பர்களுக்கு பகிரவும் :





0 facebook-blogger:

இந்த செய்தி தொடர்பான உங்கள் கருத்தை பதிவிடவும்

Dream Center

Special Offer

Special Offer
Domain + Hosting & Web Design விஷேட கழிவுடன்

LIKE US ON FACEBOOK

O/L Pass Papers & Books

Send Your News


✔✔ பிரபல செய்திகள் ✔✔

பார்வையாளர்கள்

 
Support : Website Design | Online Ceylon Media Unit | Online Ceylon Web Designing
Proudly powered by Blogger
Copyright © 2016. Tes News - All Rights Reserved