நபரொருவரை சித்திரவதைக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் வவுனியா – பூவரசன்குளம் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார்.
சுகயீனமுற்று களுபோவில போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், பொலிஸ் விசேட விசாரணைப் பிரிவினரால் அவர் நேற்றிரவு கைது செய்யப்பட்டுள்ளார்.
2010 ஆம் ஆண்டு கிரிபத்கொட பொலிஸ் நிலையத்தில் பொறுப்பதிகாரியாகக் கடமையாற்றிய சந்தர்ப்பத்தில், ஒருவர் மீது தாக்குதல் நடத்தியுள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் மஹர நீதிமன்றத்தில் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி மீது வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதுடன், விசாரணைகள் இடம்பெற்று வருவதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்தது.



0 facebook-blogger:
இந்த செய்தி தொடர்பான உங்கள் கருத்தை பதிவிடவும்