Admin-message ONLINECEYLON.NET செய்தித் தளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது.. Admin-message
Headlines
Admin-message

வெளிநாட்டில் கஷ்டப்பட்டு சம்பாதிக்கிறேன்! என் மனைவி பல ஆண்களுடன் சுற்றுகிறாள்: கணவனின் விபரீத முடிவு

Published on Friday, December 21, 2018 | December 21, 2018


மனைவியைக் கொலை செய்துவிட்டு விபத்து என நாடகமாடிய கணவனிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் அம்பலமாகியுள்ளது,





சேலம் மாவட்டத்தை சேர்ந்த ரவி – ராணி தம்பதியினருக்கு திருமணமாகி 2 மகள்கள், ஒரு மகன் உள்ளனர். ரவி சவுதி அரேபியாவில் பணியாற்றி வந்துள்ளார்.









அவருக்கு கிடைக்கும் விடுமுறையில் வீட்டுக்கு வந்து செல்வார். இந்நிலையில் வீட்டுக்கு வந்த அவர், மனைவியின் நடத்தையில் சந்தேகம் அடைந்து தினமும் சண்டை போட்டுள்ளார்.





இந்நிலையில் சம்பவம் நடைபெற்ற தனது மனைவியை வலுக்கட்டாயமாக மோட்டார் சைக்கிளில் வைத்து மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார்.





சிறிதுநேரத்தில் வீட்டிலிருந்த தனது மகனுக்கு போன் செய்து, அம்மா வண்டியில் இருந்து வீழே விழுந்துவிட்டார் உடனடியாக வா என அழைத்துள்ளார்.





அங்கு சென்று பார்த்தபோது தலையில் காயத்துடன் ராணி இறந்து கிடந்தார்.





வண்டியில் இருந்து தவறி விழுந்துவிட்டதாக கருதி, இருசக்கர வாகனத்திலேயே உடலை வீட்டிற்குக் கொண்டு வந்தனர்.





இந்நிலையில் ராணியை அவரது கணவன் ரவி தான் கொலை செய்துவிட்டதாக ராணியின் அண்ணன் பொலிசில் முறைப்பாடு கொடுத்தார்.





முறைப்பாட்டின் பிரகாரம் இதுகுறித்து ரவியிடம் விசாரணை நடத்தியபோது முன்னுக்குபின் முரணமாக அவர் பேசியுள்ளார்.





பின்னர் உண்மையை ஒப்புக்கொண்டு நடந்தவை குறித்து பொலிசில் வாக்குமூலம் அளித்துள்ளார்.





அவர் அளித்த வாக்குமூலம் பின்வருமாறு;





சவுதிக்கு வேலைக்குச் செல்லும் நான், சம்பாதிக்கும் பணத்தை மனைவிக்கு அனுப்பி வைப்பேன். அங்கு கல் உடைத்து வேலை செய்கையில், இங்கு எனது மனைவியுடன் பல ஆண்களுடன் சுற்றித்திரிவதாக ஊர்மக்கள் பேசினர்.





இதுபற்றி என் மனைவியிடம் விசாரித்தேன். அதற்கு அவள் சரியான பதிலைச் சொல்லவில்லை. இதனால் எங்களுக்குள் தகராறு ஏற்பட்டது.





இந்த நிலையில்தான் ராணியை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும்போது தலையில் கல்லால் தாக்கி கொலை செய்தேன் என்று கூறியுள்ளார்.


நண்பர்களுக்கு பகிரவும் :





0 facebook-blogger:

இந்த செய்தி தொடர்பான உங்கள் கருத்தை பதிவிடவும்

Dream Center

Special Offer

Special Offer
Domain + Hosting & Web Design விஷேட கழிவுடன்

LIKE US ON FACEBOOK

O/L Pass Papers & Books

Send Your News


✔✔ பிரபல செய்திகள் ✔✔

பார்வையாளர்கள்

 
Support : Website Design | Online Ceylon Media Unit | Online Ceylon Web Designing
Proudly powered by Blogger
Copyright © 2016. Tes News - All Rights Reserved