Admin-message ONLINECEYLON.NET செய்தித் தளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது.. Admin-message
Headlines
Admin-message

இரனைமடுகுளத்தில் அடுத்தடுத்து நடந்த அதிர்ச்சி சம்பவங்கள்; பொதுமக்களுக்கு அவசர எச்சரிக்கை!

Published on Monday, December 10, 2018 | December 10, 2018


கிளிநொச்சி இரனைமடுகுளத்தின் வான்பாயும் பகுதிக்குள் சென்று பார்வையிட்டுக்கொண்டிருந்த சிறுமி தவறி நீருக்குள் வீழ்ந்த நிலையில் காப்பாற்றப்பட்டு மயிரிழையில் தப்பியுள்ளார்.





குறித்த சம்பவம் நேற்று(09) மாலை ஐந்து மணியளவில் இடம்பெற்றது.





இரணைமடுகுளத்தை பார்வையிடுவதற்கு இன்று ஞாயிற்றுக் கிழமை ஏராளமான பொது மக்கள் கூடியிருந்தனர், அவர்களுடன் சிறுவர்களும் வருகை தந்திருந்தனர்.





இதன் போது சிலர் தங்களது பிள்ளைகளுடன் ஆபத்தான பகுதியான வான்பாயும் பகுதிக்குள் சென்று பார்வையிட்டு வருகின்றனர். இந்த நிலையில் குறித்த பகுதியில் இளைஞர் ஒருவர் நீரில் இழுத்துச் செல்லப்பட்டு உயிரிழந்த சம்பவத்தில் பரப்பாக இருந்த போது மறுபுறம் சிறுமி ஒருத்தி நீருக்குள் வீழ்ந்து தத்தளித்த போது ஒருவரால் காப்பாற்றப்பட்டுள்ளார்.





குறித்த சம்பவம் அங்கிருந்தவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியதோடு, இரணை மடுகுளத்தை பார்வையிடுவதற்கு வருகை தருபவர்கள் தங்களது குழந்தைகளை மிகவும் கவனமாக வைத்திருக்க வேண்டும் எனவும், ஆபத்தான பகுதிகள் என்று குறிப்பிடப்பட்டுள்ள பிரதேசங்களுக்குள் குழந்தைகளுடன் செல்ல வேண்டாம் என்றும், அத்தோடு சிறுவர்களை தனியே இரணைமடுவுக்கு அனுப்ப வேண்டாம் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.






நண்பர்களுக்கு பகிரவும் :





0 facebook-blogger:

இந்த செய்தி தொடர்பான உங்கள் கருத்தை பதிவிடவும்

Dream Center

Special Offer

Special Offer
Domain + Hosting & Web Design விஷேட கழிவுடன்

LIKE US ON FACEBOOK

O/L Pass Papers & Books

Send Your News


✔✔ பிரபல செய்திகள் ✔✔

பார்வையாளர்கள்

 
Support : Website Design | Online Ceylon Media Unit | Online Ceylon Web Designing
Proudly powered by Blogger
Copyright © 2016. Tes News - All Rights Reserved