கடந்த சில வருடங்களாக போதியளவு நீர் இன்மையினால் விவசாயிகள் பெரும் சிக்கலை எதிர்நோக்கி இருந்தனர் இவ் அடை மழையினால் விவசாயிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கடந்த பல ஆண்டுகளாக மழை நீரை நம்பி விவசாயம் செய்து வரும் செட்டிகுளம் விவசாயிகள் கடந்த மூன்று ஆண்டுகள் நீர் பற்றாக்குறையால் விவசாயத்தை கைவிட வேண்டிய நிலை ஏற்பட்டிருந்தது ஆனால் இந்த வருடம் போதியளவு மழை கிடைத்துள்ளது
ஆனால் குளங்களின் நீரை நம்பி பயிர் செய்யும் விவசாயிகள் நீரை வீண் விரயம் செய்யாமல் குளங்களையும், நீர் வடிந்து செல்லும் வாய்க்கால்களையும் புணரமைத்து நீர் முகாமைத்துவத்தை சிறந்த முறையில் கடைப்பிடிப்பதால் மட்டுமே தொடர்ந்து வருகின்ற வறட்சியான காலங்களில் பயிர் செய்ய முடியும் என எமது செய்திச் சேவை மூலம் தெரிவித்துக் கொள்கிறோம்



0 facebook-blogger:
இந்த செய்தி தொடர்பான உங்கள் கருத்தை பதிவிடவும்