Admin-message ONLINECEYLON.NET செய்தித் தளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது.. Admin-message
Headlines
Admin-message

ஐரோப்பிய ஒன்றியத்திற்கு உள்நுழைய மைத்திரிக்கு தடை.!!!

Published on Monday, November 12, 2018 | November 12, 2018

ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உட்பட அவரது குடும்பத்தினர் பயணம் செய்ய தடை விதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது என கொழும்பு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

அடுத்த வாரம் ஐரோப்பிய ஒன்றியத்தின் உள்விவகாரங்கள் தொடர்பான ஆணைக்குழுவின் விசேட பேச்சுவார்த்தை ஒழுங்குசெய்யப்பட்டுள்ளது.

மேலும் அந்த பேச்சுவார்த்தையின் போது இந்த தீர்மானம் எடுக்கப்பட உள்ளதாக கூறப்படுகின்றது.

இலங்கை தொடர்ந்து சர்வதேச சமூகத்தின் கோரிக்கையை கவனத்தில் கொள்ளாது செயல்பட்டு வருவதாக ஐரோப்பிய ஒன்றியத்திற்கு உத்தியோகபூர்வ அறிக்கை கிடைத்துள்ளது இதனை அடிப்படையாகக் கொண்டு இலங்கைக்கு வழங்கப்பட்டு வரும் ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்ற யோசனையும் முன்வைக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.



எனினும் இந்த சந்தர்ப்பத்தில் அப்படியான தீர்மானங்களை எடுக்க வேண்டாம் எனவும் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டால் நாட்டு மக்கள் பெரும் கஷ்டங்களை எதிர்நோக்க வேண்டிய நிலை ஏற்படும் எனவும் ஐக்கிய தேசிய முன்னணி உட்பட அதற்காகப் போராடும் தரப்பினர் ஐரோப்பிய ஒன்றியத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அண்மையில் வெளிநாட்டு தூதுவர்களை சந்தித்த நேரத்திலும் இந்த விடயத்தை வலியுறுத்தியுள்ளார். இதனை அடுத்து இலங்கையில் நடக்கும் அரசியலமைப்பு விரோதமான நடவடிக்கைகளில் மட்டுமல்லாது ஜனநாயகத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் தலைவர்களுக்கு எதிராக அழுத்தங்களை பிரயோகிக்கும் வகையில் சில தீர்மானங்கள் ஐரோப்பிய ஒன்றியம் மேற்கொள்ள எதிர்பார்த்துள்ளதாக தெரியவருகிறது.

இதேவேளை இலங்கையின் தற்போதைய அரசியல் சூழ்நிலைக்கு பொறுப்பானவர்களின் சொத்துக்களை தடை செய்தல், பயணத் தடை விதித்தல் உள்ளிட்ட சில விடயங்கள் குறித்து ஐரோப்பிய ஒன்றியம் கவனம் செலுத்தி வருவதாகவும் இந்த விடயம் தொடர்பான பரிந்துரைகளை ஆய்வு செய்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ளது.
நண்பர்களுக்கு பகிரவும் :





0 facebook-blogger:

இந்த செய்தி தொடர்பான உங்கள் கருத்தை பதிவிடவும்

Dream Center

Special Offer

Special Offer
Domain + Hosting & Web Design விஷேட கழிவுடன்

LIKE US ON FACEBOOK

O/L Pass Papers & Books

Send Your News


✔✔ பிரபல செய்திகள் ✔✔

பார்வையாளர்கள்

 
Support : Website Design | Online Ceylon Media Unit | Online Ceylon Web Designing
Proudly powered by Blogger
Copyright © 2016. Tes News - All Rights Reserved