பிரதான செய்திகள்:சபாநாயகர் ஆசனத்தை ஆளுங்கட்சியினர் சுற்றி வளைத்ததால் சபையில் குழப்ப நிலை தோன்றியுள்ளது.
இதன்போது சபாநாயகர் மீது புத்தகங்களை வீசி தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட நிலையில் சபாநாயகர் சபையை விட்டு வெளியேறியுள்ளார்.
பிரதமர் மஹிந்த அவர் தலைமையிலான அமைச்சரவைக்கும் எதிராக வாக்கெடுப்பை நடத்துமாறு, லக்ஸ்மன் கிரியெல்ல கோரியதையடுத்து, சபையில் அமைதியின்மை ஏற்பட்டது.
இதனையடுத்து, ஆளுங்கட்சி உறுப்பினர்கள் சபாநாயகர் ஆசனத்துக்கு அருகில் சென்றதும், ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் சபாநாயகருக்கு பாதுகாப்பை வழங்குவதற்காக சபாநாயகரை சுற்றி வளைத்தனர்.
இதன்போது குறுக்கே புகுந்த மகிந்த அணி நாடாளுமன்ற உறுப்பினர்களார் சபாநாயகரின் ஒலிவாங்கி முறித்து எறியப்பட்டது.
தொடர்ந்து கூச்சல் குழப்பம் நிலவிவந்த நிலையில் சபாநாயகரை நோக்கி புத்தங்களால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது.
இதனையடுத்து சபாநாயகர் சபையை விட்டு வெளியேறினார்



0 facebook-blogger:
இந்த செய்தி தொடர்பான உங்கள் கருத்தை பதிவிடவும்