Admin-message ONLINECEYLON.NET செய்தித் தளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது.. Admin-message
Headlines
Admin-message

#வைத்தியசாலையிலேயே #நோய்கள்_பரவும்_அபாயம்.

Published on Tuesday, October 30, 2018 | October 30, 2018

 

செட்டிகுளம் வைத்தியசாலை ஒரு காலத்தில் மிகவும் புகழ் பூத்தாகவும், நோயாளர்களுக்கு சிறப்பான சேவையை செய்துவரும் ஒரு முக்கிய வைத்தியசாலையாக இருந்தது என்பதில் ஐயமில்லை. ஆனால் அந்நிலை மாற்றமடைந்து வருகின்றது. நோயாளர் விடுதிகளில் இரவு நேரங்களில் கடுமையான நுளம்புத்தொல்லை மிக நீண்டகாலமாக காணப்படுவதாகவும்,



 

இது தொடர்பாக உரிய நிர்வாகிகளுக்கு தெரியப்படுத்தியும் பலன் கிடைக்கவில்லை என்று தெரிவிக்கப்படுகின்றது. வேறு நோய்களை குணப்படுத்த வருபவர்கள் டெங்கு நோயை வேண்டிக்கொண்டு செல்ல வேண்டிய நிலைமை காணப்பகின்றது. அத்தோடு வைத்தியசாலை நோயாளர் விடுதியினுள் நாய் பூனை அதிகம் நடமாடுகின்றது இதனாலும் நோயாளர்கள் மிகவும் அசௌகரியங்களை எதிர் நோக்குகின்றனர். இது போன்ற பல குறைபாடுகளோடேயே வைத்தியசாலை இயங்கி வருகின்றது. அனைத்து வசதிகளையும் கொண்ட இவ்வைத்தியசாலை பொறுப்பற்ற நிர்வாகிகளாலும், ஒரு சில ஊழியர்களாலும் தரம் தாழ்த்தப்படுவதை அனுமதிக்க முடியாது. யாருமற்ற இடங்களுக்கெல்லாம் டெங்கு நுளம்புகள் பரவுவதாக தண்டப்பணம் விதிக்கும் பொது சுகாதார அதிகாரிகளே கொஞ்சம் இந்த பக்கமும் சென்று வரவும்.

நண்பர்களுக்கு பகிரவும் :





0 facebook-blogger:

இந்த செய்தி தொடர்பான உங்கள் கருத்தை பதிவிடவும்

Dream Center

Special Offer

Special Offer
Domain + Hosting & Web Design விஷேட கழிவுடன்

LIKE US ON FACEBOOK

O/L Pass Papers & Books

Send Your News


✔✔ பிரபல செய்திகள் ✔✔

பார்வையாளர்கள்

 
Support : Website Design | Online Ceylon Media Unit | Online Ceylon Web Designing
Proudly powered by Blogger
Copyright © 2016. Tes News - All Rights Reserved