Admin-message ONLINECEYLON.NET செய்தித் தளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது.. Admin-message
Headlines
Admin-message

ஆட்டோவில் சிறுமியை கடத்திய இளைஞர்கள் மடக்கிப் பிடிப்பு http

Published on Sunday, December 2, 2018 | December 02, 2018

ஆட்டோவில் சிறுமியொருவரைக் கடத்த முற்பட்ட போது குறித்த சிறுமி சத்தமிட்டு கூக்குரல் எழுப்பியவாறு ஆட்டோவில் பயணித்ததைக் கண்ட பொதுமக்கள் ஆட்டோவை பின் தொடர்ந்து சென்று இடையில் வழிமறித்து அச்சிறுமியை காப்பாற்றியுள்ளதுடன் கடத்த முற்பட்ட மூன்று இளைஞர்களை மடக்கிப்பிடித்துபொலிஸிடம் ஒப்படைத்துள்ளனர்.



இச் சம்பவம் நேற்று(01) சனிக்கிழமை காலையில் களுதாவளையில் நடைபெற்றுள்ளது. இச் சம்பவம் பற்றி தெரியவருவதாவது…

களுதாவளை பிள்ளையார் ஆலயத்திற்கு பிள்ளையார் விரதம் பிடிப்பதற்காக வருகைதந்த போரதீவைச் சேர்ந்த சிறுமியொருவரை ஆட்டோவில் வந்த மூவர் இடையில் வழிமறித்து பலவந்தமாக அவரது வாயைப்பொத்தியவாறு ஏற்றிக்கொண்டு ஆட்டோவில் வேகமாகப் பயணித்துள்ளனர்.

இந் நிலையில் குறித்த சிறுமி அவர்களின் கையை உதறிவிட்டு பலமாக சத்தமிட்டவாறு கத்தியுள்ளார்.



இதனை அவதானித்த பொதுமக்கள் குறித்த ஆட்டோவை பின் தொடர்ந்து சென்று மடக்கிப்பிடித்துள்ளனர். ஆட்டோவில் பயணித்த சாரதி உட்பட மூன்று இளைஞர்களை களுவாஞ்சிகுடி பொலிஸாருக்கு அறிவித்து அவர்களிடம் ஒப்படைத்துள்ளனர்.

காதல் விவகாரமே என தெரிய வருகிறது

மேலதிக விசாரணைகளை களுவாஞ்சிகுடி பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.



ஆலயத்திற்கு வருகைதந்த சிறுமியை கடத்த முற்பட்டசம்பவம் அப்பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
நண்பர்களுக்கு பகிரவும் :





3 comments:

  1. If you want to play two separate hands rather than playing one hand, you will split the pair.

    Finally, we have directly of this particular casinos themselves
    so possible quickly begin playing. http://bbs.fytxonline.com/home.php?mod=space&uid=1754954&do=profile&from=space

    ReplyDelete
  2. If you want to play two separate hands rather than playing one hand, you will split the
    pair. Finally, we have directly of this particular
    casinos themselves so possible quickly begin playing. http://bbs.fytxonline.com/home.php?mod=space&uid=1754954&do=profile&from=space

    ReplyDelete
  3. It's perfect time to make some plans for the future and it is time to be happy.
    I've read this post and if I could I desire to suggest you few
    interesting things or advice. Maybe you could write
    next articles referring to this article. I wish to read more things about it!
    I needed to thank you for this wonderful read!! I absolutely loved every little bit of it.
    I have you bookmarked to check out new things you
    bookmarked!!, I really like your website! http://foxnews.co.uk/

    ReplyDelete

Dream Center

Special Offer

Special Offer
Domain + Hosting & Web Design விஷேட கழிவுடன்

LIKE US ON FACEBOOK

O/L Pass Papers & Books

Send Your News


✔✔ பிரபல செய்திகள் ✔✔

பார்வையாளர்கள்

 
Support : Website Design | Online Ceylon Media Unit | Online Ceylon Web Designing
Proudly powered by Blogger
Copyright © 2016. Tes News - All Rights Reserved