Admin-message ONLINECEYLON.NET செய்தித் தளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது.. Admin-message
Headlines
Admin-message

வவுனியா செல்லும் வீதியில் நடமாடும் யானைகள் அச்சத்துடன் பயணிக்கும் மக்கள்!

Published on Thursday, December 20, 2018 | December 20, 2018


யாழ்ப்பாணத்திலிருந்து வவுனியா செல்லும் வீதியிலும், மாங்குளத்திலிருந்து முல்லைத்தீவு செல்லும் வீதியிலும் இரவு நேரங்களில் யானைகள் வீதியில் நடமாடுவதால் மக்கள் அச்சத்துடன் பயணிக்கும் நிலை உருவாகியுள்ளது.





நேற்று இரவு முல்லைத்தீவு ஒட்டிசுட்டான் செல்லும் வீதியில் நடுவே நின்றிருந்த யானையால் வாகனத்தில் பயணித்த பயணிகள் பதற்ற நிலைக்குள்ளாகியுள்ளனர். இவ்வாறு இரவு வேளைகளில் வாகனங்களில் செல்லும்போது





யானையினால் அச்சுறுத்தல் ஏற்படுவதாக பொது மக்கள் தெரிவத்துள்ளனர். இரவு வேளைகளில் பிரதான வீதிகளில் யானைகளின் நடமாட்டத்தால் வாகனங்கள் பயணிப்பதில் அச்சம் ஏற்பட்டுள்ளதுடன் இப்பகுதிகளில் அண்மைய காலங்களில்





அதிகளவான யானைகளின் நடமாட்டம் அதிகரித்துக் காணப்படுவதாக தெரிவித்துள்ளனர். வேறு பகுதிகளிலிருந்து இப்பகுதிக்கு யானைகளை எடுத்து வந்து விட்டுள்ளதாக அப்பகுதியில் வசித்து வரும் மக்கள் தெரிவிக்கின்றனர்.





இரவு வேளைகளில் நெடுங்கேணியில் இருந்து முல்லைத்தீவு ஒட்டிசுட்டான் போன்ற பகுதிகளினூடாக பயணங்களை மேற்கொள்ளும் போது இவ்வாறு யானைகளின் அச்சுறுத்தல் ஏற்படுகின்றது.





இதனைக்கட்டுப்படுத்தி பாதுகாப்பான பயணத்தை ஏற்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்வேண்டும் எனவும் வாகனச்சாரதிகள் கோரியுள்ளனர்.


நண்பர்களுக்கு பகிரவும் :





0 facebook-blogger:

இந்த செய்தி தொடர்பான உங்கள் கருத்தை பதிவிடவும்

Dream Center

Special Offer

Special Offer
Domain + Hosting & Web Design விஷேட கழிவுடன்

LIKE US ON FACEBOOK

O/L Pass Papers & Books

Send Your News


✔✔ பிரபல செய்திகள் ✔✔

பார்வையாளர்கள்

 
Support : Website Design | Online Ceylon Media Unit | Online Ceylon Web Designing
Proudly powered by Blogger
Copyright © 2016. Tes News - All Rights Reserved