இந்த ஆண்டின்(2018) நடுப்பகுதியில் நாட்டின் பல பாகங்களிலும் நிலவிய கடும் வறட்சிநிலை வவுனியா மாவட்டத்தையும் கடுமையாக பாதித்திருந்த நிலையில் வறட்சியால் பாதிக்கப்பட மக்களுகான வேலையுடன் கூடிய நிவாரணம் வழங்கப்பட்டு வருகின்றது.
தற்போது வழங்கப்பட்டுவரும் நிவாரணப் பொருட்களுடன் பிரதானமாக வழங்கப்படுகின்ற அரிசி தரமற்றதாக இருப்பதாக மக்கள் எமது செய்திச்சேவையின் கவனத்திற்கு கொண்டுவந்துள்ளனர். இதுதொடர்பாக ஆய்வுசெய்தபோது உண்மையிலேயே நிவாரணமாக வழங்கப்படுகின்ற அரிசி தரம்குறைந்ததாகவே உள்ளமையை அவதானிக்க முடிந்தது .
இந்த அரிசியை குறுநாகல் உள்ளிட்ட வெளி மாவட்டங்களில் கொள்வனவு செய்து எமது மக்களுக்கு வழங்கிவருவதையும் அறியக்கூடியதாக இருக்கின்றது “ பனையால் விழுந்தவனை மாடேறி மிதிப்பது போல” வறட்சியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தரமற்ற பொருட்களை விநியோகிப்பது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாகவே உள்ளது.
வவுனியாவில் இதைவிட தரமான நியாய விலையில் அரிசியை விநியோகிக்கக்கூடிய அரிசி ஆலைகள் பல இருக்கும்நிலையில் வெளிமாவட்டங்களில் தரமற்ற அரிசியை கொள்வனவு செய்து நூற்றுக்கணக்கான மைல் தூரத்திற்கு போக்குவரத்து செலவுடன் கொண்டுவந்து கொடுக்கப்படவேண்டிய தேவை ஏன் ஏற்பட்டது? என்பது பலரின் கேள்வியாக உள்ளது.
இவ் நடவடிக்கை தொடர்பான தகவல்களையும் ஆதாரங்களையும் எமது செய்திப்புரிவு சேகரித்து வருகின்ற நிலையில் இதன் பின்னணி தொடர்பான மர்மங்கள் வெகு விரைவில் முழுமையான கட்டுரையாக வெளிவரும் .



0 facebook-blogger:
இந்த செய்தி தொடர்பான உங்கள் கருத்தை பதிவிடவும்