Admin-message ONLINECEYLON.NET செய்தித் தளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது.. Admin-message
Headlines
Admin-message

பிரான்சின் பாரிஸ் நகரில் இன்று மாபெரும் ஆர்ப்பாட்டம் 8.000 படையினர் குவிப்பு ஈபில் கோபுரம்,மியூசியங்கள்.புகையிரத நிலையங்கள் மூடப்படுகின்றன.

Published on Saturday, December 8, 2018 | December 08, 2018


பெற்றோல் விலை உயர்வினைக் கண்டித்துத் தொடங்கிய மஞ்சள் மேலங்கிக்காரர்களின் மக்கள் திரள் போராட்டம், பெற்றோலைப்போலவே ஏனைய மக்களின் பிரச்சனைகளிலும் பற்றிக்கொண்டு கொழுந்து விட்டு எரியத்தொடங்கியுள்ளது.









வீடற்றவராக வீதிகளில் ஒருவர்கூடத் துன்புறக்கூடாது. ஒருவரின் அடிப்படைச் சம்பளம் 1300€ ( net) வாக உயர்த்தப்படல் வேண்டும். வருமானத்திற்கு ஏற்றாற் போல நீதியான முறையில் வருமானவரி கட்டும் சரியான புதிய அணுகுமுறைவேண்டும்.









நகரங்களில் இலவச வாகனத்தரிப்பிடம் வேண்டும். சிறிய வணிகர்களின் நலன் பேணுதல் வேண்டும். பெரும் வணிக நிறுவனங்களான( MACDO, GOOGLE, AMAZON, CARREFOUR…) கூடுதலான வரியினைச் செலுத்தவேண்டும். ஒரே மாதிரியான சமூக மருத்துவப் பாதுகாப்பு எல்லோருக்கும் கிடைக்கவேண்டும்.









பெற்றோலியப் பொருட்கள் மீதான வரி அதிகரிப்பை நிறுத்தவேண்டும். ஓய்வூதியத்தொகை 1200€ க்களுக்கு குறைவாக இருக்கக்கூடாது. வேலையற்றோருக்கு வேலையினை வழங்குதல். மாற்றுத் திறனாளிகளுக்கான உதவிகளை அதிகரித்தல். வீட்டு வாடகைப்பணத்தை அதிகரித்துச் செல்லாமல் வரையறை செய்தல் இவ்வாறு கோரிக்கைகள் தொடர்கின்றன.









சனிக்கிழமை(08/12) 4 வாரமாக, பிரான்சு முழுவதும் நாடு தழுவியரீதியில் மஞ்சள் சட்டைக்காரர்களின் போராட்டம் இடம் பெறுகின்றது . பிரான்சு நாடு போரை எதிர்கொள்வதைப் போன்று பாதுகாப்பு ஏற்பாடுகளைத் தீவிரப்படுத்தியுள்ளது. பல ஆயிரக்கணக்கான காவல் துறையினரும் கலகமடக்கும் சிறப்புப் பாதுகாப்புப் பிரிவினரும் களமிறக்கப்பட்டுள்ளனர்.









இப்போராட்டங்களில் ஊடுருவி வன்முறையில் ஈடுபடும், வணிக நிலையங்களை உடைத்தும் பொதுச் சொத்துக்களைத் திருடியும் அழிவுக்குள்ளாக்கும் கும்பல்களிடம் இருந்து பாதுகாத்துக் கொள்வதற்காகப் பெரும்பாலான பல வணிக நிறுவனங்கள் இன்று விடுமுறை நாளாக அறிவித்திருக்கின்றன.













அழகிய பாரிசு நகரின் வரலாற்று நினைவுச் சின்னங்களப் பாதுகாக்கும் பணிகளும் பலப்படுத்தப்பட்டுள்ளன.





Beautiful panoramic view of Paris from the roof of the Triumphal Arch. Champs Elysees.








70% மான பிரெஞ்சு மக்கள் இந்தப் போராட்டங்களுக்கான ஆதரவினை வழங்கிவருகின்றனர். இந்தப் போராட்டம், இன்னுமொரு மக்கள் புரட்சியாக மாற்றம் பெறும் வாய்ப்பு உள்ளதாகவும் எதிர்வு கூறப்பட்டுள்ளது.









மக்கள் உணர்வினை, எழுச்சியினை மதிக்காத பிரெஞ்சு அரசுத் தலைவர் மக்றோனின் ஆட்சி மக்களின் மஞ்சள் அலையினால் தூக்கியும் வீசப்படலாம்!


































நண்பர்களுக்கு பகிரவும் :





8 comments:

  1. Superb, what a web site it is! This blog gives valuable facts to us, keep it up. https://revolynketoburn.org/

    ReplyDelete
  2. Superb, what a web site it is! This blog gives valuable facts to us,
    keep it up. https://revolynketoburn.org/

    ReplyDelete
  3. Particularly useful often seen from afar. Perform polite to him and
    do not avoid making small talk if he walks your choice.
    About 95% to 99% of our behaviour, thoughts, and feelings in any given day are habitual. https://918kiss.party/home/live22/5454-live22

    ReplyDelete
  4. Particularly useful often seen from afar. Perform polite
    to him and do not avoid making small talk if he walks your choice.
    About 95% to 99% of our behaviour, thoughts, and feelings in any given day are habitual. https://918kiss.party/home/live22/5454-live22

    ReplyDelete
  5. The Bears continue pertaining to being beaten near to games.
    Winning is a whole lot of better if your prize may well big, since.
    We all want to learn of wherein will help us win the
    lottery. http://hklive.org/yourl/livecasinowiki977451

    ReplyDelete
  6. The Bears continue pertaining to being beaten near to games.
    Winning is a whole lot of better if your prize may well big, since.
    We all want to learn of wherein will help us win the lottery. http://hklive.org/yourl/livecasinowiki977451

    ReplyDelete
  7. Good article and straight to the point. I am not
    sure if this is in fact the best place to ask but do you people have any
    ideea where to get some professional writers? Thanks in advance
    :) https://supreme500.net/

    ReplyDelete
  8. Good article and straight to the point. I am not
    sure if this is in fact the best place to ask but do you people have any ideea where to get
    some professional writers? Thanks in advance :) https://supreme500.net/

    ReplyDelete

Dream Center

Special Offer

Special Offer
Domain + Hosting & Web Design விஷேட கழிவுடன்

LIKE US ON FACEBOOK

O/L Pass Papers & Books

Send Your News


✔✔ பிரபல செய்திகள் ✔✔

பார்வையாளர்கள்

 
Support : Website Design | Online Ceylon Media Unit | Online Ceylon Web Designing
Proudly powered by Blogger
Copyright © 2016. Tes News - All Rights Reserved