Admin-message ONLINECEYLON.NET செய்தித் தளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது.. Admin-message
Headlines
Admin-message

வவுனியாவில் துயர சம்பவம்! தந்தை இறந்த துக்கம் தாளாது பல்கலை மாணவி தற்கொலை..

Published on Monday, November 12, 2018 | November 12, 2018

வவுனியாவில் தந்தை உயிரிழப்பு மகளான பல்கலை மாணவியும் உயிரிழப்பு வவுனியா கற்குளத்தில் தந்தை இறந்த செய்தியறிந்த மகள் சோகம் தாங்க முடியாமல் பேராதனையில் புகையிரத்தில் மோதுண்டு தற்கொலை செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இச் சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது, வவுனியா கற்குளம் 4 சேர்ந்த செல்வநாயகம் என்பவர் நேற்றைய தினம் சுகவீனம் காரணமாக மரணமடைந்துள்ளார்.இந் நிலையில் பேராதனைப்பல்கலைக்கழகத்தில் 2ஆம் வருடத்தில் கலைப்பிரிவில் கற்றுவரும் அவரது மகளான மதுசாவிற்கு தகவல் வழங்கப்பட்ட நிலையில் அவர் உடனடியாக வவுனியா வருவதற்கு பேரூந்து நிலையத்திற்கு சென்றுள்ளார்.

எனினும் தந்தையின் இறப்பை தாங்க முடியாத மதுசா பேராதனை யாக்கா பாலத்திற்கு சென்று அங்கு புகையிரத்தின் முன் பாய்ந்து தற்கொலை செய்துள்ளதாக தெரியவருகின்றது.

இந் நிலையில் சடலம் கண்டி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் மரணம் தொடர்பான விசாரணைகள் இடம்பெற்று வருவதாக தெரியவருகின்றது. இந் நிலையில் பேரூந்து நிலையத்தில் இருந்து சுமார் 4 கிலோ மீற்றர் தூரத்தில் உள்ள யக்கா பாலத்திற்கு எவ்வாறு சென்றார் என்பது தொடர்பாகவும் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றது. எனினும் இவரது உயிரிழப்பில் சந்தேகம் நிலவுவதாகவும் அறியப்படுகிறது
நண்பர்களுக்கு பகிரவும் :





0 facebook-blogger:

இந்த செய்தி தொடர்பான உங்கள் கருத்தை பதிவிடவும்

Dream Center

Special Offer

Special Offer
Domain + Hosting & Web Design விஷேட கழிவுடன்

LIKE US ON FACEBOOK

O/L Pass Papers & Books

Send Your News


✔✔ பிரபல செய்திகள் ✔✔

பார்வையாளர்கள்

 
Support : Website Design | Online Ceylon Media Unit | Online Ceylon Web Designing
Proudly powered by Blogger
Copyright © 2016. Tes News - All Rights Reserved