Admin-message ONLINECEYLON.NET செய்தித் தளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது.. Admin-message
Headlines
Admin-message

பயணிகளின் புத்தகத்தால் கண்டுபிடிக்கப்பட்ட லயன் ஏர் விமானத்தின் கறுப்புப் பெட்டி!

Published on Thursday, November 1, 2018 | November 01, 2018

இந்தோனேசியாவில் விபத்துக்குள்ளான லயன் ஏர் விமானத்தின் கறுப்புப் பெட்டியை இன்று காலை உள்நீச்சல் வீரர்கள் கண்டறிந்துள்ளனர்.

கருப்பு பெட்டி

அக்டோபர் 29-ம் தேதி காலை இந்தோனேசியத் தலைநகர் ஜகார்த்தாவிலிருந்து பங்கல் பினாங் தீவு நோக்கிக் கிளம்பிய லையன் ஏர் பயணிகள் விமானம் புறப்பட்ட 13 நிமிடங்களில் மாயமானது. ஜெடி-610 என்ற எண்ணுடைய இந்த விமானத்தில் 189 பயணிகள் இருந்தனர். ஜகார்த்தாவிலிருந்து 6:20 மணிக்கு லயன் ஏர் விமானம் புறப்பட்டது. கிளம்பிய 13 நிமிடங்களில் அதாவது சரியாக 6:33 மணிக்கு விமானத்தின் தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டது. 7:20 மணிக்கு பங்கல் பினாங் தீவு சென்றிருக்கவேண்டிய விமானம் நடு வழியில் காணாமல் போனது. இதைத் தொடர்ந்து நடந்த தேடுதல் வேட்டையில் விமானம் வடகிழக்கு ஜாவா கடல் பகுதியில் விழுந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. விமானம் கடலில் விழுந்ததால் அதில் இருந்த 189 பேரும் உயிரிழந்தனர்.





கருப்பு பெட்டி

இதையடுத்து உயிரிழந்தார்களின் உடல்களை மீட்கும் பணிகளும் விபத்துக்குள்ளான விமானத்தில் இருந்த கறுப்புப் பெட்டியைத் தேடும் பணிகளும் முடுக்கிவிடப்பட்டன. விமானம் விபத்துக்குள்ளானதுக்கு முந்தைய நாள் அதில் பழுது இருந்ததாகவும் அதைச் சரிசெய்த பின்னரே விமானம் ஜகார்த்தாவிலிருந்து புறப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, இயந்திரக் கோளாறு காரணமாகவே விபத்துக்குள்ளானது எனக் கூறப்பட்டது.

இந்நிலையில் இன்று காலை இந்தோனேசிய உள்நீச்சல் வீரர்கள் விமானத்தில் இருந்த கறுப்புப் பெட்டியைக் கண்டுபிடித்துள்ளதாக அதிகாரபூர்வ தகவல்கள் வெளியாகியுள்ளன. இது குறித்து மெட்ரோ ஊடகத்துக்குப் பேசியுள்ள வீரர்கள், ``நேற்று கடல் சீற்றம் அதிகமாக இருந்ததால் எங்களால் தொடர்ந்து தேடுதல் பணியைத் தொடரமுடியவில்லை. இன்று காலை 5 மணியளவில் கடலுக்குள் சென்றோம். முதலில் சரியான இடத்தில்தான் தேடுகிறோமா என்ற அச்சம் எங்கள் குழுவினருக்கு இருந்தது. நாங்கள் சென்ற பாதைகளில் விமானத்தில் பயணித்தவர்கள் பயன்படுத்திய பொருள்கள், உயிர் காக்கும் உடைகள், புத்தகங்கள் ஆகியவை இருந்தன. அதைத்தாண்டி சிறிது உள்ளே சென்றபோது 30 அடி தூரத்தில் மணல் தென்பட்டது. அங்கே நீண்ட தேடுதலுக்குப் பிறகு மணலுக்குள் வெள்ளை நிற இரண்டு பிரமாண்ட பெட்டி கிடைத்தன. ஒன்று 7 கிலோ எடையும், மற்றொன்று 10 கிலோ எடையும் இருந்தது. அதன் உள்ளே ஆரஞ்சு நிறத்தில் ஒரு கருவி இருந்தது. பிறகு அந்தப் பெட்டியைக் கொண்டு வந்து கப்பலில் இருந்த அதிகாரிகளிடம் ஒப்படைத்தோம். 10:15 மணியளவில் நாங்கள் கடலை விட்டு மேலே வந்தோம்” எனத் தெரிவித்துள்ளனர்.

தற்போது கிடைத்துள்ள இந்தக் கறுப்புப் பெட்டியை முழுமையாக ஆய்வு செய்த பின்னரே விமானம் விபத்துக்குள்ளான உண்மையான காரணம் குறித்த அதிகாரபூர்வ தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நண்பர்களுக்கு பகிரவும் :





0 facebook-blogger:

இந்த செய்தி தொடர்பான உங்கள் கருத்தை பதிவிடவும்

Dream Center

Special Offer

Special Offer
Domain + Hosting & Web Design விஷேட கழிவுடன்

LIKE US ON FACEBOOK

O/L Pass Papers & Books

Send Your News


✔✔ பிரபல செய்திகள் ✔✔

பார்வையாளர்கள்

 
Support : Website Design | Online Ceylon Media Unit | Online Ceylon Web Designing
Proudly powered by Blogger
Copyright © 2016. Tes News - All Rights Reserved