குறித்த நினைவேந்தல் நிகழ்வு மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இன்று நடைபெற்றுள்ளது.
இவர்களின் நினைவு தினம் வருடாவருடம் விவசாய கல்லூரியில் இடம்பெற்று வருவதுடன் குறித்த மாணவர்களின் நினைவாக மரநடுகை, இரத்ததானம், தாகசாந்தி போன்ற சேவைகளை விவசாயக்கல்லூரி மாணவர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிகழ்வில் தாண்டிக்குளம் விவசாயக்கல்லூரி அதிபர், விரிவுரையாளர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், உயிரிழந்த மாணவர்களின் உறவினர்கள், பழைய மாணவர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டு உயிரிழந்த மாணவர்களின் படத்திற்கு சுடரேற்றி மலர்தூவி அஞ்சலி செலுத்தியுள்ளனர்.



0 facebook-blogger:
இந்த செய்தி தொடர்பான உங்கள் கருத்தை பதிவிடவும்