Admin-message ONLINECEYLON.NET செய்தித் தளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது.. Admin-message
Headlines
Admin-message

ஜனாதிபதி செயலகத்திற்கு முன்னால் சர்ச்சைக்குரிய தேசியக் கொடி

Published on Wednesday, November 21, 2018 | November 21, 2018




ஜனாதிபதி செயலகத்திற்கு முன்னால் வைத்து சர்ச்சைக்குரிய தேசியக் கொடி காட்சிப்படுத்தப்பட்டுள்ளமை தொடர்பில் சமூக ஆர்வலர்கள் மத்தியில் இருந்து கடும் எதிர்ப்புகள் வெளியாகியுள்ளன.

மேலும் இச்சம்பவம் குறித்து தெரிவிக்கையில், பொதுபல சேனா அமைப்பின் பொது செயலாளர் ஞானசார தேரரின் விடுதலையை வலியுறுத்தி நேற்றைய தினம் ஜனாதிபதி செயலகத்திற்கு முன்னால் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது.

இதன்போது தமிழ், முஸ்லிம் மக்களை பிரதிநிதித்துவம் செய்யும் செம்மஞ்சள் மற்றும் பச்சை நிறங்கள் நீக்கப்பட்ட தேசியக் கொடியினை போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் காட்சிப்படுத்தியிருந்தனர்.

மேலும், இவ்விடயம் தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அண்மையிலும், பிரதமர் மகிந்த ராஜபக்ச கலந்துகொண்டிருந்த கூட்டம் ஒன்றின் போதும் தமிழ், முஸ்லிம் மக்களை பிரதிநிதித்துவம் செய்யும் மஞ்சள் மற்றும் பச்சை நிறங்கள் நீக்கப்பட்ட கொடி காட்சிப்படுத்தப்பட்டிருந்தது.

இதன்போது கடும் எதிர்ப்புகள் வெளியிடப்பட்டிருந்த நிலையில் மீண்டும் தற்போது ஜனாதிபதி செயலகத்திற்கு முன்னால் இவ்வாறான கொடிகளை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் காட்சிப்படுத்தியுள்ளனர்.

மேலும், இதுகுறித்து ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ச டி சில்வா தனது டுவிட்டர் பக்கத்தில் இவ்வாறு கூறியுள்ளார். “சிறுபான்மையின மக்களை சித்தரிக்கும் அடையாளங்கள் நீக்கப்பட்ட தேசியக் கொடி மீண்டும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னரும் ஜனாதிபதி மற்றும் பிரதமர் கலந்துகொண்டிருந்த பேரணியில் இவ்வாறான கொடிகள் காட்சிப்படுத்தப்பட்டிருந்ததாக” அவர் அவர் தனது டுவிட்டர் பதிவில் கூறியுள்ளார்.




நண்பர்களுக்கு பகிரவும் :





5 comments:

  1. And by far most: don't think that anyone could have to write high standard literature each occasion you guide.
    It lets you build an excellent reputation as well as good blogs always possess a positive touching on SEO. http://www.heavyiron.com/__media__/js/netsoltrademark.php?d=918kiss.bid%2Fgames%2Frollex-11

    ReplyDelete
  2. And by far most: don't think that anyone could have to
    write high standard literature each occasion you guide.

    It lets you build an excellent reputation as well as good blogs always possess a positive touching on SEO. http://www.heavyiron.com/__media__/js/netsoltrademark.php?d=918kiss.bid%2Fgames%2Frollex-11

    ReplyDelete
  3. To consider that might appeal for your own visitor's taste is just wrong.

    Organize your content so a person can users could easily purchase them.
    Titles comprise of your keywords as properly. http://eastrising.us/__media__/js/netsoltrademark.php?d=Magloclen.net%2F__media__%2Fjs%2Fnetsoltrademark.php%3Fd%3D918kiss.bid%2Fgames%2Fplayboy

    ReplyDelete
  4. To consider that might appeal for your own visitor's taste is just wrong.
    Organize your content so a person can users could easily purchase them.
    Titles comprise of your keywords as properly. http://eastrising.us/__media__/js/netsoltrademark.php?d=Magloclen.net%2F__media__%2Fjs%2Fnetsoltrademark.php%3Fd%3D918kiss.bid%2Fgames%2Fplayboy

    ReplyDelete
  5. So I think for the seo work we to be able to go with good stuff.
    You do not need to be an expert on search engine marketing to employ a these techniques either.
    Fooling a search engine website is becoming harder. http://Ihatehartford.info/__media__/js/netsoltrademark.php?d=jom.fun

    ReplyDelete

Dream Center

Special Offer

Special Offer
Domain + Hosting & Web Design விஷேட கழிவுடன்

LIKE US ON FACEBOOK

O/L Pass Papers & Books

Send Your News


✔✔ பிரபல செய்திகள் ✔✔

பார்வையாளர்கள்

 
Support : Website Design | Online Ceylon Media Unit | Online Ceylon Web Designing
Proudly powered by Blogger
Copyright © 2016. Tes News - All Rights Reserved