மஹிந்த தலைமையிலான அரசுக்கு பாராளுமன்ற பெரும்பான்மை இல்லாத போதும் , மக்கள் மனங்களை வென்று அடுத்த தேர்தலில் வெற்றியடையும் நோக்கத்துடன் பல அதிரடி அறிவிப்புகள் வெளியாகிய வண்ணமே உள்ளது.
ஆட்சிக்கு வந்து ஓரிரு நாளில் எரிபொருள் மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலையை குறைத்து அறிவிப்பு விடுத்தார்.
அதே போல பல காலமாக இழுபட்டு வந்த அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் ஆலோசிக்கப்படும் என அறிவித்திருந்தார்.
இன்று வடக்கு கிழக்கு பகுதிகளில் அனுஷ்டிக்கப்பட்டு வரும் மாவீரர் தின நிகழ்வுகளுக்கு அனுமதி இல்லை என சில நாட்களுக்கு முன்பு அரச தகவல் திணைக்களம் அறிவித்திருந்தது. அது மட்டுமன்றி கடந்த ஆண்டுகளில் மாவீரர் தின நிகழ்வுகள் தொடர்பில் மஹிந்த தரப்பு பலத்த எதிர்ப்புகளையும் வெளியிட்டு வந்தது.
ஆனால் இன்றைய கூட்டத்தில் மாவீரர் நாளை அஞ்சலி நிகழ்வாக மாத்திரம் நடத்துவதற்கு எந்த தடையையும் ஏற்படுத்தாதிருக்க தீர்மானம் கொண்டுவரப்பட்டுள்ளது.
அடுத்து சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளது விடுதலையை துரிதப்படுத்தும் பொறிமுறையை அமைக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
மேலும் ஐயப்ப பக்தர்களின் சபரிமலை யாத்திரையை புனித யாத்திரையாக பிரகடனப்படுத்தும் யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்துள்ளது.
இன்றைய அமைச்சரவை கூட்டத்தில் எட்டப்பட்டுள்ள இந்த அதிரடி தீர்மானங்கள் மூலம் மஹிந்த அரசு அடுத்த தேர்தலில் வடக்கு கிழக்கு மக்களின் மனங்களை வெல்லும் நடவடிக்கையில் இறங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது



I ϲonstantly spenht my half ann hour to reazd this weblog's
ReplyDeletecontent every day along with a mug of coffee. http://filmeonlinehd.eu/
І constantly spent my hаlf ɑn hour to redad this weblog's content every
ReplyDeleteday along with a mug of coffee. http://filmeonlinehd.eu/