Admin-message ONLINECEYLON.NET செய்தித் தளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது.. Admin-message
Headlines
Admin-message

2.0 எப்படி இருக்கு!

Published on Thursday, November 29, 2018 | November 29, 2018

இலங்கையை பூர்வீகமாகவும் லண்டன் சுபாஷ்கரன் என்ற தயாரிப்பாளர், ஷங்கர் என்ற இயக்குநர், ரஜினி என்கிற நடிகர் இல்லாமல் இருந்திருந்தால் இப்படம் உருவாகி இருக்குமா என்பது சந்தேகம் தான், ஏன் ? என்ற கேள்வி உங்களுக்குள் வரலாம் அதற்கான விளக்கம் இதோ…

இயக்குநர் ஷங்கர் ஒரு பேட்டியில் இப்படத்தின் பட்ஜெட் சுமார் 450 கோடி என்றார் படத்தின் ஓட்ட நேரம் சுமார் 2 மணி நேரம் 30 நிமிடங்கள் அதாவது 150 நிமிடங்கள் அதன் படி படத்தின் ஒவ்வொரு நிமிடங்களும் சுமார் 3 கோடி மதிப்பு உடையவை, படம் பார்த்த, பார்த்துக்கொண்டிருக்கும் அல்லது பார்க்க திட்டமிட்டுள்ள ஒவ்வொருவரும் நினைத்து பார்த்துக்கொள்ளுங்கள் படத்தின் ஒவ்வொரு நிமிடமும் 3 கோடி மதிப்பிலானவை, படத்தின் ஒவ்வொரு விநாடிகளும் சுமார் 5 லட்சம் மதிப்புடையவை, இன்றைய தென்னிந்திய சினிமாவில் பல திரைப்படங்கள் 2.0 வின் ஒரு நிமிட பட்ஜெட்டிற்கு எடுக்கப்படுபவையே.

இது தான் சுபாஷ்கரன் என்ற தயாரிப்பாளரின் சாதனை. வெறும் தொழில்நுட்பத்தை மட்டுமே நம்பி இப்படத்தை எடுத்துள்ளார்களா ? என்றால் அதுவும் அல்ல அதையும் தாண்டி இன்றைய சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வும், மனித இனமும் பறவைகள் இனமும் எந்த அளவிற்கு முக்கியம் என்பதனையும் தனது வழக்கமான சமூக அக்கறையுடன் மிக அழகாக தெளிவுப்படுத்தியுள்ளார் இயக்குநர் ஷங்கர். எமி ஜாக்சன், அக்‌ஷய் குமார், மயில்சாமி உள்ளிட்ட பல நட்சத்திரங்களின் நடிப்பு பிரமாதம்.

இசை புயல் இப்படத்தில் கஜா புயலாக மாறி இசையில் துவம்சம் செய்துள்ளார், நிரவ் ஷாவின் ஒளிப்பதிவும், முத்துராஜின் கலை வடிவமைப்பும், ரசூல் பூக்குட்டியின் இசை கோர்வையும் படத்தை மென்மேலும் வலுப்படுத்தியுள்ளது.

குறிப்பாக படத்தின் கிளைமேக்ஸில் ரசிகர்களுக்கு மிகப்பெரிய விருந்து காத்திருக்கிறது. மொத்தத்தில் தமிழ் சினிமாவை உலக அளவில் எடுத்துச்சென்றுள்ளனர் சுபாஷ்கரனும் ஷங்கரும்.
நண்பர்களுக்கு பகிரவும் :





4 comments:

  1. Symbols typically the game of Book of Ra online are associated to
    Egyptian atmosphere. The higher the payout percentage,
    the more winners (in terms of credits). Is there a strategy for
    doubling a $100 bankroll playing casino wars? http://siekier.com/gbook/screen.php?tcerider=weclub88.net

    ReplyDelete
  2. As a result it helps in preserving your grab.
    You lose, and the system seller (and specially the casino)
    wins. This is because there are numerous players in online bingo. http://forum.wonaruto.com/redirection.php?redirection=http%3A%2F%2Fwww.vladinfo.ru%2Faway.php%3Furl%3Dhttp%3A%2F%2F918.cafe%2Fhome%2F3win81%2F54-3win8-mobile-slot

    ReplyDelete
  3. As a result it helps in preserving your grab. You lose, and the system seller (and specially the casino) wins.
    This is because there are numerous players in online bingo. http://forum.wonaruto.com/redirection.php?redirection=http%3A%2F%2Fwww.vladinfo.ru%2Faway.php%3Furl%3Dhttp%3A%2F%2F918.cafe%2Fhome%2F3win81%2F54-3win8-mobile-slot

    ReplyDelete
  4. I am sure this post has touched all the internet users, its really really pleasant post on building up new web
    site. I could not resist commenting. Perfectly written! Your way
    of describing all in this post is actually good, all be able
    to without difficulty know it, Thanks a lot. http://foxnews.co.uk

    ReplyDelete

Dream Center

Special Offer

Special Offer
Domain + Hosting & Web Design விஷேட கழிவுடன்

LIKE US ON FACEBOOK

O/L Pass Papers & Books

Send Your News


✔✔ பிரபல செய்திகள் ✔✔

பார்வையாளர்கள்

 
Support : Website Design | Online Ceylon Media Unit | Online Ceylon Web Designing
Proudly powered by Blogger
Copyright © 2016. Tes News - All Rights Reserved