Admin-message ONLINECEYLON.NET செய்தித் தளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது.. Admin-message
Headlines
Admin-message

வவுனியாவில் வீதிக்கு வந்த 12 அடி நீளமான முதலை!

Published on Thursday, November 8, 2018 | November 08, 2018

 

வவுனியா – நாகர் இலுப்பைக்குளம் பகுதியில் வீதிக்கு வந்த 12 அடி நீளமான முதலையால் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.

நாகர் இலுப்பைக்குளம் பகுதியில் இன்று காலை மக்கள் வீதியில் பயணித்த போது 12 அடி நீளமான முதலை ஒன்றை அவதானித்துள்ளனர்.



இதனையடுத்து பதற்றமடைந்த மக்கள் முதலையை விரட்ட அவ்விடத்தில் கூடிய போது குறித்த முதலை வீதியோரத்தில் இருந்த சிறிய பற்றைக்குள் புகுந்துள்ளது.

இதனையடுத்து ஊர்மக்கள் பொலிஸாருக்கு கொடுத்த தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு வருகை வந்த வவுனியா பொலிஸார் வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளை வரவழைத்துள்ளனர்.

வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளினால் குறித்த முதலை மீட்கப்பட்டு பாதுகாப்பான இடத்தில் விடப்படுவதற்காக எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.
நண்பர்களுக்கு பகிரவும் :





0 facebook-blogger:

இந்த செய்தி தொடர்பான உங்கள் கருத்தை பதிவிடவும்

Dream Center

Special Offer

Special Offer
Domain + Hosting & Web Design விஷேட கழிவுடன்

LIKE US ON FACEBOOK

O/L Pass Papers & Books

Send Your News


✔✔ பிரபல செய்திகள் ✔✔

பார்வையாளர்கள்

 
Support : Website Design | Online Ceylon Media Unit | Online Ceylon Web Designing
Proudly powered by Blogger
Copyright © 2016. Tes News - All Rights Reserved