உள்ளூராட்சி தேர்தலில் வெற்றி பெற்றதின் மூலம் தமிழ் கனேடியப் பெண்மணியானா யுவனிதா நாதன் யோர்க் பிராந்தியக் கல்விச்சபை உறுப்பினராக தேர்தெடுக்கப்பட்டுள்ளார்.
தமிழ் கனேடியப் பெண்மணியானா யுவனிதா நாதன் கடந்த 22 ஆம் திகதி இடம்பெற்ற உள்ளூராட்சி தேர்தலில்,போட்டியிட்டார்.இதில் அவர், பகுதி 4 – தொகுதி 7 மற்றும் 8 இல் போட்டியிட்டு 6,747 வாக்குகளை பெற்று வெற்றி பெற்றார்.
இதையடுத்து, யுவனிதா நாதன் யோர்க் பிராந்தியக் கல்விச்சபை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்இதன் மூலம், இவர் முதலாவது தமிழ் கனேடியப் பெண்மணி கல்விச்சபை உறுப்பினர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.
மேலும் அவருடன் போட்டியிட்ட ஜென்னி சென் 5,572 வாக்குகளையும், கவிதா செந்தில் 1,103 வாக்குகளையும் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.



0 facebook-blogger:
இந்த செய்தி தொடர்பான உங்கள் கருத்தை பதிவிடவும்