முள்ளிக்குளம் கிராமத்திற்கு கடற்படை முகாமினூடாக செல்லும் பிரதான வீதியை கடந்த 21 ஆம் திகதி திடீர் என கடற்படையினர் முட்கம்பிகள் கொண்ட வேலியினால் வீதியை இடை மறித்து அடைத்தமையினால் மக்கள் ஒன்று சேர்ந்து எதிர்ப்பை தெரிவித்த நிலையில் குறித்த வீதியை கடற்படையினர் மீண்டும் திறந்து விட்டனர்.இந்த நிலையில் குறித்த வீதியை கடற்படையினர் மீண்டும் இன்று புதன் கிழமை(31) காலை முட்கம்பிகளினால் வீதியை மூடியுள்ளதாக அவர் தெரிவித்தார்.

இதனால், முள்ளிக்குளம் மக்கள் தொடர்ந்தும் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வருவதாக அவர் தெரிவித்தார். இன்று காலை பாடசாலை மற்றும் ஏனைய தேவைகளுக்காக முள்ளிக்குளம் வந்த அனைவரும் பல்வேறு சிரமங்களுக்கு முகம் கொடுத்ததோடு, முள்ளிக்குளம் பாடசாலைக்குச் செல்லும் மாணவர்கள், ஆசிரியர்களும் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
இதே வேளை கடற்படையினரின் குறித்த செயற்பாடுகளை கண்டித்து முள்ளிக்குளம் கிராம மக்கள் மற்றும் மாணவர்கள் இணைந்து முள்ளிக்குளத்தில் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுக்கவுள்ளதாக முள்ளிக்குளம் மக்கள் தெரிவித்தனர்.புதிய பிரதமராக மஹிந்த ராஜபக்ஷ நியமிக்கப்பட்டுள்ள நிலையில் இலங்கைக் கடற்படையினர் இந்த அதிரடிச் செயற்பாடில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.



0 facebook-blogger:
இந்த செய்தி தொடர்பான உங்கள் கருத்தை பதிவிடவும்